இந்தியா

சிறும்பான்மையினருக்கான நலனில் பாஜக அரசு அக்கறை காட்டவில்லை.. இரு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா

உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து இரு முக்கிய அமைச்சர்கள், பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து இரு முக்கிய அமைச்சர்கள், பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக வருகிற பிப்ரவரி 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற இரு முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.

குறிப்பாக சிறும்பான்மையினருக்கான நலனில் பாஜக அரசு அக்கறை காட்டவில்லை என கூறி, நேற்று துணை முதல்வராக இருந்த  மவுரியா மற்றும் எம்எல்ஏக்கள் 4 பேர் பதவி விலகியிருந்தனர்.  இதிலிருந்து உபி பாஜக மீளாத நிலையில்  வனத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகானும்  பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.