காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர். மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.