இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு: பதற்றமான சூழல் நீடிப்பதால் பொதுமக்கள் பீதி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றன.

Malaimurasu Seithigal TV

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹான்ஜின் ராஜ்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காஷ்மீர் மண்டல போலீசாரும் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இரவில் கடுமையான துப்பாக்கி சண்டை தொடங்கி நடைபெற்று  வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து, மீண்டும் ஜம்முவில் தொடர்ந்து டிரோன்கள் பறந்ததை அடுத்து, இந்திய ராணுவம் முழு உஷார்நிலைப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.