இந்தியா

இலவச உணவு வழங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுங்கள் - பாஜக எம் பி நிஷிகாந்த் துபே:

Malaimurasu Seithigal TV

சமீபத்தில் நடந்த மக்களவையில் பல தரப்பட்ட விவாதங்கள் நடந்தன. அதில் அதிகமாகப் பேசப்பட்டது  ஜி.எஸ்.டி வரி குறித்து தான். குறிப்பாக உணவு போன்ற அதியாவசய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி குறித்து எதிர்கட்சியினர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். ஆனால், இது குறித்து பேசிய பாஜகவின் மக்களவை உருப்பினர் நிஷிகாந்த் துபேவின் கருத்துகளை எதிர்த்து, நெட்டிசன்கள் கேளி செய்து வருகின்றனர்.

சர்ச்சைப் பேச்சு:

ஜார்க்கண்டின் பாஜக எம்.பி.யான நிஷிகாந்த் துபே, நேற்று நடந்த மக்களவையில், சர்ச்சைக்குறிய கருத்துகளை வெளிப்படுத்தி, தற்போது பேசுபொருளாகியிருக்கிறார். னாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி குறித்து பேசிக் கொண்டிருந்த மக்களவை உருப்பினர்களுக்கு பதிலளித்த நிஷிகாந்த், பிரதமர் மோடிக்கு நன்றி கூற சொல்லிக் கேட்டிருக்கிறார்.

எதிர்கட்சி போராட்டம்:

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் நீண்ட போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பிறகு முக்கியமான பிரச்சினையான, உணவு வரி மற்றும், விலையுயர்வு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இவர், ஏழை, எளியோருக்கு இலவச ரேஷன் மற்றும் உணவு வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டும் என்று பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் நேற்று மக்களவையில் பேசியிருக்கிறார்.

‘பிரதமருக்கு நன்றி கூறுங்கள்’:

தொடர்ந்து பேசிய அவர், “இலங்கை, வங்காளம், பூடான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்க்கும் போது, அங்கு விலைவாசி உயர்சு அதிகமாக இருப்பதும், பலர் வேலைவாய்ப்பின்றி தவிபதையும் கவனிக்கலாம். இது போன்ற நிலையில், நமது நாட்டில், ஏழை எளிய மக்கள் பசியில் வாடாமல் இருக்க, இரண்டு வேளைகளுக்கு இலவச உணவு வழங்கும் நமது நாட்டுப் பிரதமர் மோடிக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என்று கூறினார்.

இது பெரும் சர்ச்சயைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அவரை பங்கமாகக் கேளி செய்து வருகின்றனர்.

தக்காளி வெங்காயம் விலை குறிவு:

மேலும், உணவுக்கான விலைகள் அதிகரித்துக் கொண்டே போவது குறித்த கேள்விகளுக்கு, தக்காளி மற்றும் வெங்காத்தின் விலை குறைந்து விட்டது என்று கூறினார். இதனைக் கண்டித்து, திமுக எம் பி கனிமொழி, “தினமும் சட்னியா சாப்பிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.