இந்தியா

அதிமுக-விடம் ராகுல் காந்தி ஆதரவு கேட்கவில்லை- காங்கிரஸ் பரபரப்பு விளக்கம்!!

குடியரசு தலைவர் தேர்தலுக்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரிடம் ராகுல்காந்தி தொலைபேசியில் ஆதரவு கோரவில்லை என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Suaif Arsath

16 ஆவது குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கும், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல்காந்தி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிட்ம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உள்ள நிலையில், காங்கிரஸ் இந்த செய்தியால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தரப்பில் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது, முற்றிலும் பொய்யான செய்தி என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்த நடக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.