மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடந்த அக்னிவீரர் ஆள்சேர்ப்பிற்கான உடல் தகுதி தேர்வின் போது, மோசடி செய்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடந்த அக்னிவீர் உடல் தகுதி தேர்வில், இளைஞர்கள் மோசடி செய்ய முயன்று பிடிபட்டுள்ளனர். உடல் தகுதி தேர்வில் அவர்களின் உயரத்தை அதிகரித்து காட்ட விக் அணிந்தும் சிலர் காலணிகளில் அட்டைப் பெட்டியை மாட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டவுடன் ஆட்சேர்ப்பு தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.