இந்தியா

ஒரே ஒரு ஜும் காலில் 900 பேரை வேலையிலிருந்து தூக்கிய பிரபல கம்பெனி...

அமெரிக்காவை சேர்ந்த பெட்டர் டாட் காம் என்ற பிரபல நிறுவனம், ஒரே ஒரு ஜும் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவை சேர்ந்த பெட்டர் டாட் காம் என்ற பிரபல நிறுவனம், ஒரே ஒரு ஜும் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஜும் காலில் ஊழியர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விஷால் கார்க், நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்றும், நீங்கள் தற்போதிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். 

இந்த அதிர்ச்சி அறிவிப்பை கொடுத்துள்ள அவர், தமது ஊழியர்களை சோம்பேறி மற்றும் பலனளிக்காதவர் என திட்டியுள்ளார். 3 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஜும் காலில் 900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 250 பேர், ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் மட்டுமே பணியாற்றியதாகவும், பெட்டர் டாட் காம் நிறுவன சி.இ.ஓ. விஷால் கார்க் குறிப்பிட்டுள்ளார்.