இந்தியா

இரண்டு மனைவிகளால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு...ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தை!

புதுச்சேரியில் குடும்ப தகராறில் தந்தை தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தனியார் கார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இவர், தனது இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகன் தினேஷ்சுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், வழக்கம்போல நேற்றிரவு ஏற்பட்ட சண்டையில்  அவரது மகன் தினேஷ், கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த  கிருஷ்ணமூர்த்தி அருகிலிருந்த கத்தியை எடுத்து  தினேஷின் மார்பில் சரமாரியாக குத்தியதில் நிலை தடுமாரி கீழே விழுந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தினஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான தினேஷின் தந்தையை தேடி வருகின்றனர்.