இந்தியா

உயிரிழப்புகளை மறந்து மக்கள் இயல்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் மத்திய அரசு - ஃபரூக் அப்துல்லா!

Tamil Selvi Selvakumar

உயிரிழப்புகளை மறந்துவிட்டு, மக்கள் இயல்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான அவர், காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் உரிமைகளை மறுப்பதை மட்டுமே மத்திய அரசு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மாநிலத்தில் அரசு அலுவலகத்தில் புகுந்து சுடுவது, பண்டிட்டுகள் மீது தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மக்கள் இயல்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாக சாடினார்.