இந்தியா

பள்ளி நேரத்தில் மது போதையில் இருந்த பெண் ஆசிரியர்...! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்...!

மது அருந்திவிட்டு பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் ..!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக கங்கலக்ஷம்மா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்தும் போது மது அருந்திவிட்டு  மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது போன்ற செயல்களை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதை உணர்ந்த பெற்றோர், ஆசிரியை கங்கலக்ஷம்மாவை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அவர் மாறவில்லை. இதனால் பள்ளிக்கு பூட்டு போட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பிஇஓ ஹனுமா நாயக் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர் மேஜை பெட்டியை திறக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.


 
பிஇஓ ஹனுமா நாயக் பெட்டியை  திறக்கச் முயன்றபோது, அதை  கங்களாக்ஷம்மா எதிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேஜையை வெளியே கொண்டு வந்து பெட்டியின் பூட்டை உடைத்தனர். அப்போது ஒரு மது பாட்டில் இருந்தது. மேலும், இரண்டு காலி மதுபாட்டில்கள் இருந்தன. 
 
இதனைப் பார்த்த அதிகாரி, ஆசிரியை கங்களாக்ஷம்மா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.