இந்தியா

பாஜக மூத்த தலைவரின் மகளை மணக்கும் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பேரன்...

சிவ சேனா தலைவர் பால்தாக்கரேவின் பேரனை பாஜக மூத்த தலைவரின் மகள் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

 பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் பாட்டீலின் மகள் அங்கிதா பாட்டீலுக்கும், மறைந்த சிவ சேனா தலைவர் பால்தாக்கரேவின் பேரன் நிஹாருக்கும் வரும் 28-ஆம் தேதி மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இடையேயான அரசியல் ரீதியிலான நட்பு முறிந்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் பாட்டீலின் மகளான அங்கிதா பாட்டீல், மறைந்த பால்தாக்கரேவின் பேரன் நிஹாரை மணக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.