இந்தியா

பறவை மோதியதால் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்...!

உத்தரப்பிரதேசத்தில் பறவை மோதியதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிரக்கப்பட்டது.

Tamil Selvi Selvakumar

2 நாள் பயணமாக வாரணாசி சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு புறப்பட்டார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜன்னலின் மீது பறவை மோதியதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஹெலிகாப்டரை அவசரமாக தரையிரக்க விமானி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.