இந்தியா

ஜம்மு-காஷ்மீரை மீட்டெடுப்பதே முக்கிய கோரிக்கை... குலாம் நபி ஆசாத் பேட்டி...

பிரதமர் மோடியுடனான கூட்டத்தில்

Malaimurasu Seithigal TV
ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு மாநிலத்தை" மீட்டெடுப்பதே கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று கூறினார். ஆனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து கூட்டத்தில் ஆசாத் வலியுறுத்துவாரா? என்பது குறித்து உறுதிப்பட கூறவில்லை.