இந்தியா

புதிய அரசு முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்... நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை...

பஞ்சாபில் புதிதாத அமைந்துள்ள அரசு முடிவுகள் எடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

கடந்த 10 நாட்களுக்கு முன் பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பதிலாக தலித் பிரிவைச் சேர்ந்தவரும் நவ்ஜோத் சிங் சித்து-வின் ஆதரவாளருமான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களில் சிலர் மீதான அதிருப்தியால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் நேற்று திடீர் ராஜினமா செய்துள்ளார். இந்தநிலையில் பஞ்சாப்பில் அமைந்துள்ள புதிய அரசு முடிவுகள் எடுப்பதில் மிக அதீத கவனம் செலுத்த வேண்டும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதனிடையே சித்து வேறு ஒரு கட்சியில் சேருவதற்காகவே காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.