இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு!!..

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

உலகளவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோர் பலருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்தநிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொற்று பரவி இருப்பதாகவும், இதில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கும்,  மகராஷ்டிராவில் 167 பேருக்கும் ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.