கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். அமர்நாத் பனி லிங்கத்துக்கு ஆரத்தி உள்ளிட்ட பாரம்பரிய பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்  உல்கெங்கிலும் உள்ள பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக அமர்நாத் பனி லிங்கத்துக்கான் ஆரத்தி பூஜைகளை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 22 வரை நாள்தோறும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் அரை மணி நேரத்திற்கு அமர்நாத் பனி லிங்கத்துக்கான் ஆரத்தி பூஜைகள் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் பக்தர்கள் கண்டுகளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.