இந்தியா

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படுமா...? கருத்துகணப்பில் வெளியான எதிர்பார்ப்பு சதவீதம்

Tamil Selvi Selvakumar

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படும் என பெரும்பாலானோர் எதிர்பார்ப்பதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள்,  சலுகைகள் தொடர்பான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு தற்போதுள்ள இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்படும் என 64 சதவீதம் பேர் எதிர்பார்ப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.