கொரோனா காரணமாக கடந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு, பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர்கள் குறுகிய நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இந்தநிலையில் நடப்பாண்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது வருகிற நவ.29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் போது நிதித்துறை சார்பில் இரு மசோதாக்கள் உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.