இந்தியா

ஆப்ரிக்க சிங்கத்தை நெருங்க முயன்ற நபர்..! போலீசார் அவரை நெருங்கியதால் சோகம்..!

ஜெஸ்ட் மிஸ்ஸில் சிங்கத்திடம் இருந்து தப்பித்த இளைஞர்..!

Malaimurasu Seithigal TV

ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க சிங்கத்தை நெருங்க முயன்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதி அருகே உள்ள பாறை மீது ஏறி சிங்கத்தின் அருகில் செல்ல முயன்ற ஒரு இளைஞர், வெளியில் உலாவி கொண்டிருந்த சிங்கத்தின் கவனத்தை ஈர்த்தார். பாறை மீது அமர்ந்திருந்த அந்த நபரை சிங்கம் தாவி பிடிக்க முயற்சி செய்யவே, பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அலறினர்.

இது குறித்து பூங்கா ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த சுற்றுலா பயணிகள் அந்நபரை விரட்ட முயன்றுள்ளனர். பின் அங்கி வந்த பூங்கா ஊழியர்கள் அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். சாய் குமார் என்ற அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.