இந்தியா

கர்நாடகாவில் ரூ.2,500 கோடி மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டங்களை திறந்து வைக்கவுள்ளார் பிரதமர்!

Tamil Selvi Selvakumar

கர்நாடகாவில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

நாட்டில் அனைத்து வீடுகளிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஓராண்டில் பிரதமர் மோடி ஏராளமான குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அந்தவகையில், கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மற்றும் பெலகாவி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள பிரதமர் மோடி, ’ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், இரு மாவட்டங்களைச் சேர்ந்த 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள்.

மாநிலங்கள் முழுவதும், பிரதமரால் தொடங்கப்பட்ட சமீபத்திய திட்டங்களில், பெரும்பாலானவை குடிநீர் வழங்கும் திட்டங்களே என்பது குறிப்பிடத்தக்கது.