இந்தியா

3-வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர் ..? அதிர்ச்சியில் மக்கள்..!

Malaimurasu Seithigal TV

புதுச்சோியில் மீண்டும் கடல் செந்நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிா்ச்சியைடைந்தனா். 

கடந்த மாதம் இருமுறை கடற்கரை சாலை  தலைமை செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதியில்  கடல் செந்நிறமாக கடல் நீர் காட்சியளித்தது. இதையடுத்து அடுத்த கட்டமாக கடல் நீர், மற்றும் மண்ணின் மாதிரிகளை சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகளின் ஆய்வில் கடல் நீரில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்பது தெரியவந்தது.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள 2கி.மீட்டர் தூர கடற்கரைப்பகுதி கடந்த 15 தினங்களுக்கு முன்பு செந்நிறமாக மாறி இரண்டு வண்ணத்தில் காட்சியளித்தது. 

ஏற்கனவே இரண்டு முறை இது போல் காட்சியளித்த நிலையில் தற்போது 3வது முறையாக கரையோரப்பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு கடல்  நீல நிறத்திலும்  அலைகள் செந் நிறத்திலும் காட்சியளிக்கின்றது.

.