இன்றைய பங்குச் சந்தை கடும் சரிவுடன் முடிவடைந்தது. அதற்கு காரணம் வங்கிகளின் சரிவு மட்டுமல்ல ஆட்டோ செக்டர் மற்றும் எனர்ஜி செக்டரும் தான். நிப்டி பேங்க் இன்று 1,875.05 (3.39%) புள்ளிகள் சரிந்துள்ளது. நிப்டி ஆட்டோ 1,088.95 (4.25) புள்ளிகள் மற்றும் நிப்டி FMCG 1,217 (2.53%) சரிந்துள்ளது. மேலும் பைனான்சியல் பங்குகளும் சரிவை தொடங்கியள்ளது.
இன்றைய சரிவுக்கான காரணம்!
எச்டிஎஃப்சி (HDFC) வங்கித் தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இன்று வங்கியின் பங்குகள் சுமார் 9% வரை சரிந்து, ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை இழந்தது கேகி மிஸ்திரி என்பவர் இடைக்காலத் தலைவரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மேலாண்மை மாற்றம் மற்றும் நிர்வாகக் காரணங்களால் வங்கியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஃபெட்ரல் வங்கியின் பேரியல் பொருளாதார கவலைகள் காரணமாக சரிந்து, வாகனத் துறை 4% வரை வீழ்ச்சியடைந்ததால், சந்தை சரிவுக்கு வாகனப் பங்குகள் வழிவகுத்தன. FMCG துறையானது இந்தியப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய துறையாகும். எரிசக்தி தட்டுப்பாட்டால் அதன் பங்குகள் சரிவை கண்டு வருகிறது.
ஈரானில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதால், போர் சூழ்ந்துள்ள நிச்சயமற்ற நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 111 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியா போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிர்ச்சி செய்தியாகும். கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு 110 டாலருக்கு மேல் நீடித்தால், அது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். 2027 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படும். இந்த புவிசார் அரசியல் பதட்டங்களால் பலவீனமான மனநிலை மேலும் மோசமடைந்த நிலையில், பரந்த துறைசார் அழுத்தங்கள் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளும் குறியீடுகளைக் கீழிறக்கின.
முன்னதாக ஹோர்முஸ் நீர்சந்தி முடங்கியதால் எரிசக்தி தட்டுப்பாட்டால் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது திரவ இயற்கை எரிவாயுவை (LNG) பதப்படுத்தும் முக்கிய மையமான ராஸ் லஃபான் மீது ஈரான் நடத்திய பதிலடி ஏவுகணைத் தாக்குதல்களால் “பெரும் சேதம்” ஏற்பட்டதாக, கத்தாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் நிகர விற்பனையாளர்களாகத் தொடர்ந்தனர், புதன்கிழமையன்று ரூ. 2,714 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று வெளியேறினர். இது தொடர்ச்சியாக 14-வது நாளாக நிகர வெளியேற்றத்தைக் குறிக்கிறது. மேலும் சமீபத்தில் தொடரும் விற்பனை போக்கு ஒட்டுமொத்த சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி உள்நாட்டு முதலீட்டாளர்களும் தொடர் சரிவால் வெளியேறி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் மாறிவரும் சுங்கவரிக் கொள்கை நிலைப்பாடு தொடர்பான கொள்கை மற்றும் அதன் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை காரணிகளாக அவர் சுட்டிக்காட்டினார் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல். ஃபெடரல் ரிசர்வ் தனது முக்கிய கொள்கை வட்டி விகிதத்தை 3.50–3.75 சதவீதமாக மாற்றாமல் வைத்திருந்தாலும், வலுவான பணவீக்கம், நிலையான வேலையின்மை நிலைகள் மற்றும் இந்த ஆண்டில் ஒரே ஒரு வட்டி விகிதக் குறைப்பு மட்டுமே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய ரூபாய் மேலும் வலுவிழந்து காணப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக 92.63 என்ற வரலாறு காணாத சரிவை தொட்டுள்ளது. "அதிகரித்து வரும் இறக்குமதி செலவினத்தால் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம், இந்தியாவின் நாணய மதிப்பின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தொடரும் கப்பல் போக்குவரத்துத் தடைகளுடன் சேர்ந்து, இந்தியாவிற்கான இறக்குமதிச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற போக்கு அதிகரிக்கின்றன," என்று எல்.கே.பி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர், ஆராய்ச்சி ஆய்வாளர் ஜதீன் திரிவேதி கூறினார். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படும் என்ற நிலையில் ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் நீடிக்கும் என தெரிகிறது.
அதனையடுத்து commodity யில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது, இதற்கிடையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வின் விலை அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.