இந்தியா

விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையில் திடீரென தீ பற்றியது...அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களால் பரபரப்பு!

புதுச்சேரியில் ’விக்ரம்’ படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு வெளியேறினர்.  

Tamil Selvi Selvakumar

புதுச்சேரி காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் திரையிடப்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று இரவு படம் திரையிடப்பட்டு க்ளைமாக்ஸ் சீன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து  தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துகொண்டு தியேட்டரைவிட்டு வேகமாக வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காலாபட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் அடித்து தீயை அனைத்தனர், ஆனாலும் திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பின்னர் இது சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.