இந்தியா

தலை மீது அம்மாவை நிற்க வைத்து சாகசம்...சர்க்கஸில் நடந்த பகீர் சம்பவம்..! 

சர்க்கஸ் ஒன்றில் தாயை தன் தலையின் மீது வைத்து நடந்த போது மகன் தவறி விழுந்த வீடியோ காட்சி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

சர்க்கஸ் ஒன்றில் தாயை தன் தலையின் மீது வைத்து நடந்த போது மகன் தவறி விழுந்த வீடியோ காட்சி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசியா நாட்டின் சைபீரியா நகரத்தில் ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முக்மத் சுவன்பேகோவ் என்பவர் தன்னுடைய தாயை தன் தலைமீது நிற்க வைத்தபடியே நடந்து சாகசம் ஒன்றை அரங்கேற்றினார்.

அப்போது அவர் கயிற்றில்  மெதுவாக நடந்து கொண்டே நடுப்பகுதிக்கு சென்று, அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.சுமார் 24 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

அப்போது அவருடைய தாய் சாதுரியமாக கயிற்றைப் பிடித்து நின்று கொண்டார் இதனை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.