இந்தியா

திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் செல்லாமல் ஒட்டு போட சென்ற புதுமணப்பெண்!!

திருமணம் நடந்து முடிந்த பிறகு மாமியார் வீட்டுக்கு செல்லாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பெண்.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டபேரைத் தொகுதிகளில் 3ஆம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரேதேச மாநிலத்தில் புதிதாக திருமணமான ஜூலி என்ற பெண், திருமணம் முடிந்துபிறகு தனது மாமியார் வீட்டிற்கு கூட செல்லாமல், பிரோசாபாத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றி உள்ளார்.