இந்தியா

"அதானி - சரத்பவார் சந்தித்துக் கொண்டதில் தவறில்லை” - அஜித் பவார் பேட்டி!

Tamil Selvi Selvakumar

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும், தொழிலதிபர் அதானியும் சந்தித்துக் கொண்டதில் தவறில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எதிர்கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாக கூறப்படும் பரபரப்புகளுக்கு மத்தியில், அதானியும் சரத்பவாரும் சந்தித்துக் கொண்டது பேசுபொருளானது.

இந்நிலையில் புனேவில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், அதானி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும், அதற்கென உச்சநீதிமன்றத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல்வாதிகள் பலரும் அதானியை சந்தித்து வருகிறார்கள். அதனால் ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கும்போது அதானி - சரத்பவார் சந்தித்துக் கொள்வதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.