இந்தியா

நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு...! அவசர அவசரமாக தரையிறக்கம்...!

Malaimurasu Seithigal TV

டெல்லி விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்ப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  

தலைநகர் டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை 06.25 க்கு புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.  இது குறித்து டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த விமானத்தை அவசரமாக டெல்லிக்கு திருப்பி தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர்.