இந்தியா

விளையாடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சரின் மகன் - விளக்கம் கொடுக்கும் அமைச்சர்

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி தனது மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக கூறுவதில் சற்றும் உண்மையில்லை என பீகார் சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

அவர்களை அமைச்சரின் மகன் வெளியேற்ற முயற்சித்த போது அமைச்சரின் மகனுக்கும் கிராமவாசிகள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

இதனால் ஆந்திரமடைந்த அமைச்சரின் மகன் பப்லு கூட்டத்தினரை பயமுறுத்த தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் கிராமவாசிகள் சிலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ள அமைச்சர் நாராயண் பிரசாத், தனது மகன் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றும் தனது மகனின் துப்பாக்கி போராட்டகாரர்களால் பறிக்கப்பட்டதாகவும் தன் மீதான நற்பெயரை கெடுக்க வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.