கேரள மாநிலம திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவியில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நாளுக்கு நாள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்சமயம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள சாலக்குடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிரப்பள்ளி அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும் இயற்கை எழிலோடு குட்டி நயாகரா போல் காட்சியளிக்கும் இந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.