மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 40 பேரின் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டதாகவும், வாசிங்கடன் போஸ்ட் மற்றும் கார்டியன் இதழில் அந்த பட்டியல் வெளியாகும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த என்.சி.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 40 பேர் வேவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப உள்ளனர்.