இந்தியா

பாஜக-வில் இணைந்தது குற்றம்- மொட்டை அடித்து பிராயசித்தம் தேடிய எம்.எல்.ஏ  

பாஜகவில் இணைந்தது குற்றம் என்றும், தனது தவறுக்கு பிராயசித்தமாக தலையை மொட்டையடித்து கொண்டதாகவும் திரிபிரா எம்.எல்.ஏ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

பாஜகவில் இணைந்தது குற்றம் என்றும், தனது தவறுக்கு பிராயசித்தமாக தலையை மொட்டையடித்து கொண்டதாகவும் திரிபிரா எம்.எல்.ஏ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த ஆஷிஷ் தாஸ். அக்கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்த அவர், கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்டதுடன், பாஜகவில் இணைந்தது குற்றம் எனவும் கூறினார்.

திரிபுராவில் பாஜக அரசு அகற்றப்படும் வரை மொட்டை தலையுடனே இருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.