கடந்த ஏப்ரலில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள்மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 -பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லக்ஷ்ர் -இ -தொய்பா அமைப்பின் மூலம் ஆதரவு பெரும் The Resident Front தான் காரணம் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிர வாதிகளை குறிவைத்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ஒன்றை நடத்தியது. சிந்து நதி ஒப்பந்தத்தை முறித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டகால், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையில் குறித்தார் ட்ரம்ப். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை குறைந்தது 25 முறையாவது பாகிஸ்தான்- இந்தியா போரை நிறுத்தியது நான்தான் என சொல்லியுள்ளார். ஆப்ரேஷன் சிந்துவிற்காக மோடி பாராட்டப்படும்போதெல்லாம், ட்ரம்ப் இதை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு பாஜக தலைமை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ட்ரம்ப் சொல்லுவதுதான் உண்மை எண்பதுபோலவே நடந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷியாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்குநம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.
மேலும் இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.அதில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து வர்த்த செய்தால்ஏற்கனவே வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழத்தான் செய்யும்.
வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை இந்தியா, ரஷியா மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து மிகக் குறைவான வணிகத்தையே மேற்கொள்கிறோம். அவர்களது கட்டணம் மிக அதிகம். இந்த உலகிலேயே, பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் கட்டணம் அதிகம்.
இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே மற்றொரு அறிவிப்பையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்."பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறோம்.
இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்வார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.