இந்தியா

2 நாட்கள் முழு ஊரடங்கு... கேரள அரசு அறிவிப்பு...

கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Malaimurasu Seithigal TV
பக்ரீத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள் ஊரடங்கு தளர்வுகளை கடந்த சனிக்கிழமை கேரள அரசு அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி  நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு  தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் கேரளாவில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும்  வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவதை தடுக்க ஆங்காங்கே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.