இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை அமைச்சர் துபாயில் புதிய இந்து கோவிலை திறந்து வைத்தார்!!!

Malaimurasu Seithigal TV

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த கோயில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றான சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கமாகும். 

கோயில் திறப்பு:

தசரா பண்டிகையையொட்டி இன்று கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அமைச்சர், ஹிஸ் ஹைனஸ் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் கோவிலை  திறந்து வைத்தார்.இங்கு 2020 ஆம் ஆண்டு 16 தெய்வங்களின் சிலைகளுடன் கோயிலின் அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் அனுமதி:

வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன கோவிலின் உள்பகுதியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கோவில் நுழைவு:

இந்து கோவில் மேலாளர்கள் பக்தர்களின் நுழைவுக்காக இணையதளம் மூலம் QR குறியீடு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். QR குறியீடு மூலம், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்க வேண்டியதில்லை எனவும் கோவிலில் ஒழுங்கு மற்றும் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் இது உதவும் எனவும் கோயில் சார்பில் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் தரிசனம்:

கோயிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி,  கோயில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு தினமும் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.