இந்தியா

"பாஜகவிற்கு தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை மாற்றட்டும்" உமர் அப்துல்லா சவால்!!

Malaimurasu Seithigal TV

தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை பாரத் என பாஜக மாற்றம் செய்யட்டும் என ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சவால் விடுத்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கூட்டணி இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சி செய்வதாக கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை பாரத் என பாஜக மாற்றம் செய்யட்டும் என ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சவால் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "பெயர்மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அது சாத்தியம் எனில் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் செயலாகும் அது. பாஜகவிற்கு தைரியம் இருந்தால், பெயர் மாற்றம் செய்யட்டும். யார் ஆதரிக்கிறார்கள் என்று பார்க்கலாம் " என உமர் அப்துல்லா சவால் விடுத்தது கண்டனம் தெரிவித்துள்ளார்.