இந்தியா

நீருக்கடியில் மெட்ரோ...! சோதனை ஓட்டம் வெற்றி...!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதையில்  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதிக்கு அடியில் 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தாவின் மையப்பகுதியில் உள்ள எஸ்பிளனேடு பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த ரயிலானது நதிக்கு அடியில் ரயில் செல்லும் 520 மீட்டர் தூரத்தை 40 வினாடிகளில் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.