இந்தியா

மகாகவி பாரதியின் உறவினரை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...!

Malaimurasu Seithigal TV

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளான இன்று அவரது குடும்பத்தாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாளான இன்று உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் அவரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பாரதியாரின் உறவினரான கே.வி.கிருஷ்ணனை சந்திதார்.

இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ”மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று, காசியில் அவரது குடும்பத்தினரைச்  சந்திக்கும் பேறு கிட்டியது. அவரது உறவினர் திரு. கே. வி. கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதமும், ஊக்கமும் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்” என பதிவிட்டுள்ளார்.