இந்தியா

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவால் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிவேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இதற்குஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் என பலர் கொரனோ பாதிப்புக்கு ஆளாகினர். அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் பொக்ரியாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மத்திய கல்வித்துறை பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.