இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் முதன்மைத் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் முதன்மைத் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள IAS, IPS, IFS, IRS, IES மற்றும் பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 2022-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை UPSC வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான IAS, IPS உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி 7, 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான IFS பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு 2022 பிப்ரவரி 27 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடுத்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு 2022 ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்றும்,  முதன்மைத் தேர்வு 2022 செப்டம்பர் 16-ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் IES, NDA, NA என்று 24 வகையான தேர்வுகளுக்கான தேதிகளையும் UPSC வெளியிட்டுள்ளது.