இரண்டு தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்சியினரிடையே பேசிய உள்தறை அமைச்சர் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதன் அவசியம் குறித்து பேசியிருந்தார். அதற்கு அடுத்த உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய கேசவ் பிரசாத் மவுரியா, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி என்றும் மவுரியா கூறியுள்ளார்.