இந்தியா

வாகன ஆவணங்கள் வரும் 31-ம் தேதி வரை செல்லும்…  

வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வரும் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

Malaimurasu Seithigal TV

வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வரும் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இன்னும் இயல்பு நிலைக்கு பல்வேறு துறைகளும் திரும்பாததால்,வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் கடந்த மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வரும் 31-ம் தேதி வரை மேலும் ஒருமாத காலம் நீட்டித்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.