இந்தியா

பிரம்மபுத்திரா நதியில் விபத்துக்குள்ளான பயணிகள் படகு நதியில் மூழ்கும் வீடியோ வைரல்

அசாமில் பிரம்மபுத்திரா நதியில் பயணிகள் படகு ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் விபத்துக்குள்ளான படகு நதியில் மூழ்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

அசாமில் பிரம்மபுத்திரா நதியில் பயணிகள் படகு ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் விபத்துக்குள்ளான படகு நதியில் மூழ்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கவுகாத்தியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹட் என்னும் பகுதியில் உள்ள நிமதி காட்டில் 2 பயணிகள் படகு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படகில் பயணித்த 200க்கும் மேற்பட்டோர் நதியில் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 82 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நீரில் மூழ்கி ஒரு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான படகு நதியில் மூழ்கும் பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ள பயணிகள் ஆற்றில் குதிப்பதும், பயணிகள் பலர் தங்களை காப்பாற்ற கோரி அலறும் சத்தமும் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.