இந்தியா

பழங்குடியின பெண்ணுக்கு மொட்டை அடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்திய கிராம மக்கள்... 

காதலனுடன் ஊரை விட்டு ஓட முயன்ற பழங்குடியின பெண்ணுக்கு, கிராம மக்கள் மொட்டை அடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்தியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

குஜராத் மாநிலம் படானின் ஹர்ஜி என்னும் பகுதியில் வாடி பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாடி பழங்குடியினத்தின் சட்டதிட்டங்களை மீறி அக்கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனுடன் ஊரை விட்டு வெளியேற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அதற்கு தண்டனையாக கிராம மக்கள் அப்பெண்ணின் தலையை மொட்டை அடித்து, முகம் மற்றும் தலையில் கறியை பூசி அவமானப்படுத்தியுள்ளனர். கிராம மக்களில் மனிதாபிமானமற்ற செயலால் அப்பெண் அவமான தாங்காமல் கதறி அழும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.