இந்தியா

ஆபத்தை உணராது வறண்ட கிணற்றின் மீது ஏறி போட்டிப்போட்டு தண்ணீர் இரைக்கும் மக்கள்...வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவில், ஆபத்தை உணராது வறண்ட கிணற்றில் டேங்கர் லாரி மூலம் ஊற்றப்படும் நீரை கிராம மக்கள் போட்டிப்போட்டு இரைத்து எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கோடை காலம் காரணமாக வடமாநிலங்களில் கடும் வெயில் சுட்டெரிப்பதோடு, நீர்நிலைகளும் வறண்டு வருகின்றன.  குறிப்பாக மகாராஷ்டிராவின்  ஹாடியல் கிராமத்தில் உள்ள 2 கிணறுகளும் வறண்டு வருவதால் மக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களின் தேவைக்காக தினசரி 3 டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு வறண்ட கிணற்றில் கொட்டப்படுகிறது. இதனை போட்டிப்போட்டு கொண்டு நீரை இரைத்து எடுக்கும் மக்கள், அது கலங்கல் நீராக இருப்பதுடன் நோயும் பரவி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கிராம மக்கள் ஆபத்தையும் உணராது  கிணற்றின் மீது ஏறி நின்று கொண்டு தண்ணீரை இரைத்து எடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.