இந்தியா

சொந்த நாடு திரும்ப முடியாத வெளிநாட்டவர்களின் விசா நீட்டிப்பு..!!!

சொந்த நாடு திரும்ப முடியாத வெளிநாட்டவர்களின் விசா நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் கொரோனா தொற்று சூழலால், அதற்கு முன் உரிய விசாவுடன் இந்தியா வந்த வெளிநாட்டவர் பலர் சொந்த நாடு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.  

இந்நிலையில் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்காத நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலத்தை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி நீட்டிப்பது என்று உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட காலம் வரை விசா நீட்டிப்புக்காக வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்கத் தேவையில்லை.

அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும்போது, வெளியேறுவதற்கான அனுமதிக்கு மட்டும் விண்ணப்பித்தால் போதும். அந்த அனுமதி அவர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படும் என உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.