இந்தியா

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு எச்சரிக்கை....

Malaimurasu Seithigal TV

அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலை செய்ய விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு எடுத்து கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.  இல்லையெனில் அவர்கள் ரயில்வேயில் நடந்ததுபோல விருப்ப ஓய்வில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செயல்திறன் மிக்க ஊழியர்களே தேவை எனவும் மாதந்தோறும் அவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அரசின் சார்பில் செய்யப்பட வேண்டியவைகள் செய்யப்பட்டு விட்டன எனவும் இப்போது ஊழியர்களுக்கான நேரம் எனவும் தொலைதொடர்பு அமைச்சர் பேசியுள்ளார்.  ஊழியர்களின் செயல்பாடு குறித்த மாதாந்திர அறிக்கையை அவர் மாதந்தோறும் கண்காணிக்க இருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது 1.64 லட்சம் கோடி முதலீடு செய்து துணிச்சலான முடிவு எடுத்துள்ளார் என்பதை அமைச்சர் இங்கு நினைவுபடுத்தியுள்ளார்.

பிபிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தொலைதொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.