இந்தியா

பயண வசதிக்கு ஏற்பவே ரயில்வே துறையை மாற்றியமைத்து வருகிறோம் - பிரதமர் மோடி!

Tamil Selvi Selvakumar

குடிமக்களின் பயண வசதிக்கு ஏற்றாற் போல், ரயில்வே துறையை மாற்றியமைக்கவே முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு, நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் போபால் ராணி கமலாபதியில் இருந்து டெல்லியின் ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு 7 மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வந்தே பாரத் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி மாணவிகளிடம் உரையாடினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில்கள் நமது தேசத்தின் திறமை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். மக்களை திருப்திபடுத்தவே முந்தைய அரசுகள் நேரத்தை செலவிட்ட நிலையில், மக்களின் தேவையை உணர்ந்து பாஜக செயல்படுவதாகவும், குடிமக்களின் பயண வசதிக்கு ஏற்றாற் போல், ரயில்வே துறையை மாற்றியமைக்கவே மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.