இந்தியா

"151 உடல்களை அடையாம் கண்டுள்ளோம்" ஒடிசா அரசு!

Malaimurasu Seithigal TV

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 151 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளளதாக ஒடிசா மாநில தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். 

கடந்த 2ம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தொடர்ந்து மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவுற்று காயமடைந்தோர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இறந்தவர்கள் 275 பேரில் 151 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், உரிய நடைமுறைகளுக்குப் பின் உடல்களை இலவசமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும் மாநில தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். 

முன்னதாக இந்த ரயில் விபத்தில் 288 பேர் இறந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 288 என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உடல்களை எண்ணும் போது ஏற்பட்ட தவறால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்த்திக் காட்டப்பட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.