இந்தியா

யஷ்வந்த் சின்ஹாவிற்கு வரவேற்பு...மோடிக்கு எதிர்ப்பு...சந்திரசேகர ராவின் யுக்தி என்னவா இருக்கும்?

தெலங்கானாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மோடி வருகையை புறக்கணித்தது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த பிரதமர் மோடியை வரவேற்பதை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தவிர்த்தார். தெலங்கானா அரசு சார்பில்  அமைச்சர் ஸ்ரீனிவாஸ்  பிரதமர் மோடியை வரவேற்றார்.

எனினும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அதே விமான நிலையத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடியை திட்டமிட்டு சந்திரசேகர ராவ் அவமதிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.