இந்தியா

எப்போது இயல்பு நிலை திரும்பும்..? சவுமியா சுவாமிநாதன் தகவல்...

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 3-வது அலை பரவ வாய்ப்பிருப்பதாகவும், தினசரி பாதிப்பில் அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத உச்சத்தை இந்தியா அடையும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், கடந்த மாதங்களை போல தற்போது கொரோனா பரவல் இல்லை என்றும் மெதுவாகப் பரவும் நிலையை நாடு அடைந்துள்ளதாகவும் கூறினார். 

தொற்று பரவலைத் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வுடன் மக்கள் வாழத் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், கொரோனா தொற்றின் முதல், இரண்டாவது அலைகளில் பாதிக்கப்படாதோா் அதிகமாக உள்ள பகுதிகள், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த சில மாதங்களில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். 

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமாா் 70 சதவீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டவுடன் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் மூன்றாம் அலை பரவும்போது, சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்றும் கூறினார். ஆனால் அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் 18 வயதைக் கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளும், சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளதாகவும் கூறினார்.